வணக்கம்

பிழைகளை மன்னித்து புதினம் கற்பிக்கவும். நன்றி

Monday, October 4, 2010

வேலை நிமித்தம்


வேலை  வேலை  என ,
விரைந்து ...
வியர்த்து ...
சுற்றம்   மறப்பாய் ;
சூரியன்  மறப்பாய் ;
தோழர்களோடு      
வட்டமிட்டு  வன்  புகழ்ந்து 
வயிறு  வலிக்க   நகைத்த காலங்களை 
தற்போது ,
விடியற்காலை  உணவு  இடைவேளையில் 
மனதில்  அவ்வுணர்வுமாய் ,
வாயில்  சத்தில்லா  அவ்வுணுவுமாய்
அசைபோடுகின்றாய்..

காலை  பத்திற்கு  உயர்ந்து ,
பன்னிரெண்டுக்கு  ஓட  துவங்கும்போது ,
அம்மாவின்  அச்சமும் ;
அப்பாவின்  அறிவுரைகளும் ;
சகோதர  கண்களின்  சோகமும் 
உன்னால்  உணரமுடிந்ததா , தெரியவில்லை..

பின்  ஒரு  நாளில் ;
மணமுடிந்து  மணமுடித்தவனும்  அவ்வண்ணமே   இருக்க ,
மனதார  பரிமாற  பல  உள , இருந்தும் ;
பணியும்  அவ்வண்ணமே  , பல !

ஒருநாள்  ஓட்டம்  தவிர்த்து  பார்த்தபோது ,
வியப்பாய் ; 
ஏக்கமாய் ; 
எதிர்பார்ப்பாய் ;  பல  கண்கள் !!!


தந்தைக்கு...

யாதுமாகி நின்றாய்..
யாவராயினும் ;
யாதுமாயினும் ;
யாதுமாகி நின்றாய்.. யார்க்கும் யார்க்கும் ...

யாமறிவோம் நின்
யாசிப்பும் யோசிப்பும..
யாகமாகிய கோபங்களும் :
யாழிசையாகிய மகிழ் தருணங்களும்..

யாதுமாயினும்,
யாவர் நலனிலும் ; யாவர் நன்றிலும்
யாதுமாக நின்றாய் ; நிறைந்து நின்றாய்..
யாரால் என போற்றப்பட்டாய்..

யாதுமாகி நிற்பவள் யாவருக்கும் கிடைப்பதில்லை,
யாகையால், நின்றவளுடன், எங்களாண்டு வரை எங்களுக்கு
யாதுமாகி நிற்க, யாதுமாகிய யாதுமானவனிடம்
யான் பிராத்திக்கின்றேன்