வணக்கம்

பிழைகளை மன்னித்து புதினம் கற்பிக்கவும். நன்றி

Monday, April 22, 2019





நீ துயில்கையில்,
நுந்தை கொடுத்த,
நான்கு முத்தங்களின் வெப்பம் போதும் -அவரடித்து
நீயழுத கண்ணீர் கரைய!!

கனவு காண்

















பௌர்ணமியின் முன்னிரவு கனவில்
உன் முகமோ?!
பேரொளியாய் நிலா !!











மங்கை மான் விழி அம்புகள் !!




மஞ்சள் தன்னில்  தஞ்சம் கொண்ட
தஞ்சை பாவை முகமோ கொஞ்சும்,
நஞ்சை  கூந்தல் கெஞ்சும் பூக்கள்
நன்மை கோர இம்மை முடியும்,
பஞ்சும் சிவக்கும் வெட்கம் கொண்டு
மஞ்சம் எய்து கலவி காண,
மிஞ்சும் தீயே பஞ்சம் கேட்க -பிர
பஞ்சம் தேடி விண்வெளி மேய்ந்து
எஞ்சியுள்ள உலகம் சொல்லும் -செம்
மஞ்சள் வானம் வெண்மையாகும்!!
ம(ய)ங்கும் விழிகளுரைக்கும் அஞ்சல்
கொஞ்சல் காதல்,காதல் அஃதே!!


Monday, October 4, 2010

வேலை நிமித்தம்


வேலை  வேலை  என ,
விரைந்து ...
வியர்த்து ...
சுற்றம்   மறப்பாய் ;
சூரியன்  மறப்பாய் ;
தோழர்களோடு      
வட்டமிட்டு  வன்  புகழ்ந்து 
வயிறு  வலிக்க   நகைத்த காலங்களை 
தற்போது ,
விடியற்காலை  உணவு  இடைவேளையில் 
மனதில்  அவ்வுணர்வுமாய் ,
வாயில்  சத்தில்லா  அவ்வுணுவுமாய்
அசைபோடுகின்றாய்..

காலை  பத்திற்கு  உயர்ந்து ,
பன்னிரெண்டுக்கு  ஓட  துவங்கும்போது ,
அம்மாவின்  அச்சமும் ;
அப்பாவின்  அறிவுரைகளும் ;
சகோதர  கண்களின்  சோகமும் 
உன்னால்  உணரமுடிந்ததா , தெரியவில்லை..

பின்  ஒரு  நாளில் ;
மணமுடிந்து  மணமுடித்தவனும்  அவ்வண்ணமே   இருக்க ,
மனதார  பரிமாற  பல  உள , இருந்தும் ;
பணியும்  அவ்வண்ணமே  , பல !

ஒருநாள்  ஓட்டம்  தவிர்த்து  பார்த்தபோது ,
வியப்பாய் ; 
ஏக்கமாய் ; 
எதிர்பார்ப்பாய் ;  பல  கண்கள் !!!


தந்தைக்கு...

யாதுமாகி நின்றாய்..
யாவராயினும் ;
யாதுமாயினும் ;
யாதுமாகி நின்றாய்.. யார்க்கும் யார்க்கும் ...

யாமறிவோம் நின்
யாசிப்பும் யோசிப்பும..
யாகமாகிய கோபங்களும் :
யாழிசையாகிய மகிழ் தருணங்களும்..

யாதுமாயினும்,
யாவர் நலனிலும் ; யாவர் நன்றிலும்
யாதுமாக நின்றாய் ; நிறைந்து நின்றாய்..
யாரால் என போற்றப்பட்டாய்..

யாதுமாகி நிற்பவள் யாவருக்கும் கிடைப்பதில்லை,
யாகையால், நின்றவளுடன், எங்களாண்டு வரை எங்களுக்கு
யாதுமாகி நிற்க, யாதுமாகிய யாதுமானவனிடம்
யான் பிராத்திக்கின்றேன்

Thursday, September 30, 2010

கொல்லிப்பாவை

வெண்ணிலவில் இரு  கருமை  கண்டேன்  
வியர்த்து  நின்றேன்  - வெறித்து , புரிந்து,  
விழித்தது  கருமையல்ல -  உன்  கரு  
விழயுருண்டைகள் என  தெளிந்து  புரிவதற்குள் ...

மூங்கில்  மரத்தின்  வழப்பு  கண்டேன் - வியந்து  
மூக்கில்  நுகர்ந்தேன்   - மரத்தின்  
முடிவில்  ஓர் துளைக்கு  பதில்   இரண்டுணர்ந்தேன் ..
முக்தி  பெற்ற  என்  அறிவுக்கு , அது  உன்  
மூக்கு  என  தெளிந்து  புரிவதற்குள் ...

பளிங்கு  படிகள்  பார்த்து , பத்து  நொடி  
பாதியானேன்  - படிகளின்  
பளீர்,  பட்டென  மறைய - மறைத்தது  உதடென  
பணிக்கும்போது , பளிங்கென  நினைத்தது  
பற்கள்  என  தெளிந்து  புரிவதற்குள்  ...
மதியொன்றை கண்டேன்  
மலைத்து  நின்றேன்  - அது  
மற்றுமொரு நாள்  மதியல்லாததனால்  ..
மலைத்து  மதியல்ல  என்  
மடந்தையின்  மாசில்லா  
முகம்  என  தெளிந்து  புரிவதற்குள் … 

என்  கனவு  முடிந்தது ... 

எண்ணம்  கரைபுரண்டோட , இன்னும்   
ஆராய்ந்து  காத்திருக்கிறேன் ..
என்னை   தொலைக்கசெய்யும் ,
வியப்பின்  விந்தையான , 
உன்  ஜனனம்  புரிய ...

ஆண்டவனின் மருஉ

நாம்  விழித்தெழுமுன்  குளித்து ,
குளியளுக்குமுன்  வழியனுப்ப  ஆயுத்தமாவாள்..

முழங்கால்  வலித்தாலும்  கனுக்கால்  கொதித்தாலும் ,
முடியும்வரை  மாடாய் வாழ்க்கை  செக்கிழுத்து...

பதியின்  பாட்டுக்கெல்லாம்  பணிவாய்  பயந்து ,
புதியவன்  புலர்ந்த  போது புதிதாய்  பிறந்து…

யாதுமாய்  நிற்க மற்றொரு உறவு  உருவாக,
யாதுமாய்  நின்ற   நீ - ஒரு வியப்புதான் 

ஆண்டவன்  தன் பேர்  மாற்றிக்கொள்ளலாம் ,
அம்மா  என்று !!!